இந்தியாவிலுள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தின் அகமத் நகரில் வசித்து வந்த 23 வயதான இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
எனினும் இவ்விருவரின் குடும்பத்தினர் இவர்களது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். குறித்த பெண், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எனக் கூறி, இளைஞனின் குடும்பத்தினர், இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து, குறித்த இளைஞனும், இளம்பெண்ணும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இந்த விடயத்தை அறிந்து கொண்ட இளைஞனின் வீட்டார், இருவரையும் தேடித் சென்று, எரித்தே கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விடயம் அறிந்த காவல்துறையினர் இளைஞரின் பெற்றோரைக் கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.