இளைய தளபதி விஜய்யின் நடிப்பில், தளபதி-63 திரைப்படம், அட்லீயின் இயக்கத்தில், மிகவும் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல், தீபாவளிக்கு திரைப்படத்தை வெளியிடுவதற்கு திரைப்படக் குழு தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ,தளபதி அடுத்து நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டது.
அதுவும் இயக்குனர் சிவா சொன்ன கதை, தளபதிக்கு பிடித்துப் போனதாகவும், நடிக்க சம்மதம் கூறியதாகவும், சினி உலகம் தகவல் வெளியிட்டது.
ஆனால், இப்போது அந்தப் பேச்சு அப்படியே இருக்க, சிவா, நடிகர் சூர்யாவை வைத்து, தளபதி சம்மதம் சொன்ன அந்தக் கதையில் நடிக்க வைக்க, ஆயத்தமாகி வருகிறாராம்.