அவுஸ்ரேலிய ரிசர்வ் வங்கி, சமீபத்தில் பணம் அச்சிடும் போது மிகப் பெரிய தவறை விட்டுள்ளமை தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக வெளியிடப்பட்ட 50 டொலர் நாணயத் தாளின் ஒரு இடத்தில் 'ஐ' என்ற ஆங்கில எழுத்தை அச்சிடாமல் விட்டுள்ளது அந்நாட்டு ரிசர்வ் வங்கி.
குறித்த மஞ்சள் வண்ணத்திலுள்ள இந்த நாணயத்தாளின் கீழ்ப் பகுதியில் சிறிய எழுத்துக்களால் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருக்கும். அதில் "Responsibility" என்பதை "Responsibilty" என்று அவுஸ்ரேலியா ரிசர்வ் வங்கி எழுத்துப் பிழையோடு அச்சிட்டுள்ளது.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இந்த நாணயத்தாள் வெளியாகி சுமார் 6 மாதங்கள் ஆன நிலையில், தற்போது தான் இந்தத் தவறு கவனிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது மிகப்பெரிய தவறை ஒப்புக் கொண்டுள்ள அவுஸ்ரேலிய ரிசர்வ் வங்கி, எதிர்காலத்தில் இந்த மாதிரியான தவறுகள் நடக்காது என வாக்குறுதி அளித்துள்ளது.
இந்திய பண மதிப்பில் சுமார் 2250 கோடி ரூபாய் மதிப்புள்ள குறித்த நாணயத் தாள்கள் தற்போது பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நாணயத் தாள்கள் தடை செய்யப்படுமா? அல்லது புழக்கத்தில் இருக்குமா என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை.