1,233 Views
இதில் உரையாற்றிய கமல்ஹாசன் "பார்த்திபன் மட்டுமல்ல, இந்த விழாவுக்கு வந்திருக்கும் பலர்,தங்களுடைய முதல்ப் படங்களில் என்னைத்தான் அணுகினர்.ஏன்,பார்த்திபன், தனது 'புதிய பாதை' படத்தில் நடிக்க என்னைக் கேட்டார்.அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு திகதி கொடுக்க முடியவில்லை.அவரே நடித்து கதாநாயகனாக ஆகிவிட்டார். இதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
எனக்கு இங்கே காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை அன்பாகக் கொடுத்தார்கள்.அதில் உள்ள ஒருசம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. காந்தியடிகள், புகையிரதத்தில் ஏறும்போது,அவருடைய காலில் உள்ள ஒரு செருப்பு தவறுதலாகக் கீழே விழுந்துவிட்டது.உடனே காந்தி, தன்னுடைய இன்னொரு காலில் உள்ள செருப்பையும் தூக்கி கீழே போட்டுவிட்டார். ஏனெனில், ஒற்றைச் செருப்பு யாருக்கும் பயன்படாது என்பதால்,இன்னொரு செருப்பையும் கீழே போட்டதாகக் காந்தி கூறினார். அப்படித்தான் நானும், இன்னொரு செருப்புக்காக காத்திருக்கின்றேன். செருப்பு விழுந்ததால் நாம் அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை. செருப்பை வீசியவர்தான் அவமானப்பட வேண்டும்" என்றும், மேலும் உலகநாயகன் கூறியுள்ளார்.