தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரைப் போல, தற்போது இந்தியாவின் தமிழகத்திலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகின்றமை தமக்கு மிகுந்த கவலையைத் தந்துள்ளதாக, பிரபல நடிகர் விவேக் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிலை மாற வேண்டுமாக இருந்தால், தமிழத்தில் விடுமுறை, பிறந்த நாட்கள் வரும் போது, மாணவர்கள் மரம் நட்டு கொண்டாட வேண்டும் என, நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர் வார வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.