நேபாளத்தின் சொளுகும்பு மாவட்டம் தாமே கிராமத்தைச் சேர்ந்தவர் காமி ரீட்டா ஷெர்பா 50 வயதான இவர் பிரபல மலையேற்ற வீரர், இவர் இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை 23 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்தார்.
கடந்த 15-ம் திகதி இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். இந்நிலையில் இன்று மீண்டும் 24 வது தடவையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.
காமி ரீட்டா ஷெர்பாவிற்கு குறைந்தது 25 முறையாவது எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்பதே இவரது லட்சியம் என கூறுகிறார். பழங்குடியின மக்களான ஷெர்பாக்கள் மலையேறுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதால், மலையேற்ற வீரர்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.