பசியுடன் வருபவர்களுக்கு, இலவசமாக உணவளிக்கும் விடுதி
SooriyanFM Gossip - பசியுடன் வருபவர்களுக்கு, இலவசமாக உணவளிக்கும் விடுதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
அமெரிக்காவிலுள்ள பிரபல விடுதி ஒன்றில், பசியுடன் வருபவர்களுக்கு முற்றிலும் இலவசமாக உணவளிக்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிக்கைக்கு அருகில் உள்ள பகுதியில் உள்ள சகீனா ஹலால் கிரில் என்ற விடுதியிலேயே, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்த விடுதியின் உரிமையாளரான கசி என்பவர், கடந்த 2013 ஆம் ஆண்டில் குறித்த விடுதியை ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்று வரை, அந்த விடுதிக்கு பசியுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு, இலவசமாக உணவளிக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், குறித்த விடுதிக்குள் வருகை தந்து காசு கொடுத்து சாப்பிடுபவர்களுக்கு உண்டான அதே மதிப்புத் தான், இலவசமாக உணவு சாப்பிடுபவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இது குறித்து விடுதியின் உரிமையாளர் கசி கருத்து வெளியிடும் போது, '’நான் பாகிஸ்தான் தேசத்தில் பிறந்தவன். சிறுவயதிலேயே ஏழ்மையில் தவித்தேன். அந்தப் பசியின் கொடூரம் எனக்குத் தெரியும். நான் அமெரிக்காவில் வந்து தங்கி மேன்மையான நிலைக்கு வந்ததும் பல மக்கள் பசியால் இருப்பதை அறிந்தேன். அவர்களுக்கு ஆதரவாக தற்போது இந்த விடுதியில் இலவசமாக உணவளித்து வருகின்றேன் ’'என்று கூறியுள்ளார்.