குங்குமப்பூவில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும் என, மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருவுற்ற பெண்கள் தினமும் குங்குமப் பூவை பாலில் கலந்து உண்ணுவதால், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டு பால் விட்டு நன்கு கலந்ததும், அதனை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.