பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்துள்ள படம் 'சாஹோ'. இந்த படம் மிக பிரம்மாண்ட பணச்செலவில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்திற்கு பெரிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்து படம் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஷங்கர்-இஷான்-லாய் விலகியுள்ளனர்.
இதனால் படக்குழு வேறு வழி இல்லாமல், ஒரு புதிய இசையமைப்பாளரை தேடி வருகிறதாம். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் ஒப்பந்தம் ஆக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.