விஸ்வாசம் படத்தில் உடல் குண்டான தோற்றத்தோடு, அதிக வெள்ளை முடி தோற்றத்தில் நடித்து கலக்கிய தல அஜித், தற்போது போனிகபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோட் சூட் அணிந்து தனது தோற்றத்தை டிப் டொப்பாக காட்டியிருக்கிறார் தல.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அஜித் பொலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். அத்தோடு அந்த படத்தின் இயக்குனர் உடல் எடையைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.
இதன் காரணமாக அஜித் தன்னுடைய உடலை அந்த படத்துக்கு ஏற்றால் போல குறைக்க ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்து வருகிறாராம். அத்தோடு தனது உடல் எடையை அதிகமாக குறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
90களில் பார்த்தது போல் தற்போது நேர்த்தியான உடல் தோற்றத்தை வடிவமைத்திருக்கும் அஜித், அந்த தோற்றத்துடன் வெளியிடங்களில் நடமாடத் தொடங்கியிருக்கிறார்.