இந்திய விமானப் படைக்கு சொந்தமான A.N 32 என்ற விமானமே இவ்வாறு மாயமானதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று நண்பகல் 12.30 அளவில் அசாமில் இருந்து பறக்க ஆரம்பித்த குறித்த விமானம், பிற்பகல் 1 மணிக்கு பின்னர் சுமார் 2 மணி நேரமாக ரேடர் இணைப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது வரை குறித்த விமானம் தொடர்பில் எந்தவிதத் தகவல்களும் கிடைக்கவில்லை என, இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்தநிலையில், குறித்த விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.