திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரங்களின் பங்குபற்றுதலுடன், சில சரித்திரத் திரைப்படங்கள் தயாராகி வருவதாக, செய்திகள் வெளிவந்துள்ளன.
மம்முட்டி, மோகன்லால், மற்றும் பிரதிவ்ராஜ் உள்ளிட்டோர் மேற்படி சரித்திர படங்களில் நடிக்க உள்ளனர்.
பாகுபலி வெற்றிக்கு பிறகு மலையாளத்தில் அதிகமான சரித்திர, புராண படங்கள் தயாராகின்றன. பிரதிவ்ராஜ் கர்ணன் புராண படத்தில் நடிக்க உள்ளார். கர்ணன் கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதுபோல் மோகன்லால் மகாபாரதம் கதையில் நடிக்கிறார்.
இந்த படத்தில் பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. அத்துடன் நடிகர் மம்முட்டி ‘மாமாங்கம்’ என்ற சரித்திர கதையில் நடிக்கிறார். கேரளாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற மாமாங்கம் திருவிழாவை மையமாக வைத்து, இந்த படம் உருவாகிறது. இந்த படம் மலபாரை சேர்ந்த போர் வீரனை பற்றிய கதையாகும்.
இதில் பிராச்சி தேசாய், உன்னி முகுந்தன், மாளவிகா மேனன், பிராச்சி தேஹ்லன் ஆகியோரும் நடிக்கின்றனர். சஜீவ் பிள்ளை இயக்குவதாக கூறப்பட்ட போதிலும், இன்னும் உறுதியாகவில்லை.