2,606 Views
அயர்லாந்து நாட்டில் தன்பாலின திருமணத்துக்கு ஆதரவாக 62 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் அங்கு தன்பாலின உறவுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலகில் தற்போது 20 நாடுகளில் தன்பாலின திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக் கப்பட்டுள்ள நிலையில் அவ் வரிசையில் அயர்லாந்தும் இணைந்துள்ளது. தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அந்நாட்டில் அண்மையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 19 லட்சத்து 35 ஆயிரம் பேர் வாக்களித்தனர். அவர்களில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தன்பாலின திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
உலகளாவிய அளவில் பொது வாக்கெடுப்பு நடத்தி தன்பாலின உறவுக்கு அங்கீகாரம் அளித்த முதல்நாடு என்ற பெருமையை அயர்லாந்து பெற்றுள்ளது.
சட்ட அங்கீகாரம் கிடைத்த பின்னர் ஹேன் லூயிஸ் கிலிகன் மற்றும் கெத்தரின் செப்போன் ஆகிய பெண்கள் முதன்முறையாக திருமணம் செய்துகொண்டுள்ளனர்.


