2,668 Views
வனவள பாதுகாப்பு அதிகாரிகள் இந்த பகுதிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இந்த எச்சத்தை கண்டுள்ளதுடன் இது தொடர்பில் காவற்துறையினருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.
குறித்த நபர் வவுனியா - செட்டிக்குளம் காவற்துறை நிலையத்தில் சேவையாற்றிய நிலையில் காணாமல் போனவர் என்று பின்னர் தெரியவந்தது.
குறித்த மனித எச்சத்துக்கு அருகில் பை ஒன்றும் , அதில் காவற்துறை திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை, பற்தூரிகை மற்றும் ஆடைகள் போன்றன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த நபர் உயிரிழப்பதற்கு முன்னர் எழுதியதாகக் கூறப்படும் கடிதமொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதில் தனது உடல் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவிக்கும்படியும், தனது கையடக்கத் தொலைபேசியை மூத்த மகளுக்கு வழங்கும் படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


