அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் முதலில் சந்தானம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அந்த வேடத்தில் சூரி ஒப்பந்தமானார்.
தற்போது சூரியுடன் இரண்டு முக்கிய காமெடி நடிகர்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர், தற்போது தமிழ் சினிமாவில் காமெடியால் கலக்கிக்கொண்டிருக்கும் நான் கடவுள் ராஜேந்திரனும் மற்றொருவர் டைமிங் காமெடியால் எல்லோரையும் சிரிக்க வைத்து வரும் சுவாமிநாதனும்தான்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக இப்படத்தில் இடம்பெறும் அஜித்தின் அறிமுக பாடலை படமாக இருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
-கோடம்பாக்கக் குருவி-