5,174 Views
கட்டான , தமின்னகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரின் பெயர் அசங்கா நிரோஷனி . அவர் சிறு வயது முதலே ஆண்களைப் போன்ற நடை , உடை பாவனைகளை பின்பற்றுவதற்கு ஆர்வமாக இருந்துள்ளார்.
மேலும் பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் அசங்க என்ற பெயரில் ஆணாக வாழ்ந்து வந்துள்ளார். ஆண்களைப் போலவே கட்சிதமாக உடையணிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இவருக்கு சிறுமியொருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதுடன் , அவரை திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே சிறுமியை தன்னுடைய விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆணாக நடித்த அப்பெண்ணை கைதுசெய்துள்ளனர்.
பின்னர் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளையிலேயே அவர் பெண்ணொருவர் என தெரியவந்துள்ளது.
தற்போது நீதிமன்ற உத்தரவின் படி அப் பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.