அன்னக்கொடி மூலம் கையை சுட்டுக் கொண்ட இயக்குனர் பாரதிராஜா, இப்பொழுது மீண்டும் ஒரு கதையோடு களம் இறங்கியுள்ளார்.
ஆனால் இயக்குனர் இமயம் என்று பெயர் எடுத்த இவர் இம்முறை படத்தை இயக்கப்போவதில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
புதிய இயக்குனர் ஒருவர் படத்தினை இயக்க, பாரதிராஜா எழுதிய கதை திரைக்காவியமாக உருவாகி வருகிறது.
படத்தினைப் பற்றி பாரதிராஜாவே கூறுகையில்...
"பாண்டியநாடு படத்துக்குப் பிறகு மீண்டும், நிறைய வாய்ப்புக்கள் என்னை திரையில் நடிகனாக்குவதர்க்கு வந்தன. ஆனாலும், நான் சம்மதிக்கவில்லை. இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரையில், இங்கிருந்து லண்டனில் குடியேறுகின்ற ஒரு வயதானவருக்கும் , துடிப்போடு பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையிலே நடைபெறுகின்ற உணர்வுபூர்வமான கதையாக கதை நகருகிறது. அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்படும் பத்திரிகையாளன் என்பதால், கதையில் நானே பிடித்துப் போனதால் நடிக்க சம்மதித்தேன். இரண்டு மாதங்கள் லண்டனில் படப்பிடிப்பை நடத்தவுள்ளோம்.
இப்பொழுது வருகின்ற திரை மசாலாக்களை விட, இது யதார்த்தம் பேசும் படமாக திரைக்கு வரும்" என்றார்.
வரட்டும்..
பார்ப்போம்; ரசிப்போம்.