27,193 Views
மர்மான முறையில் உயிரிழந்த வசீம் தாஜூடீனின் சடலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலதிக விசாரணைகளின் பொருட்டு தோண்டி எடுக்கப்பட்டது.
இந்நிலையில் தாஜூடீனின் மாமா பயாஸ் லதீப் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது தாஜூடீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு அவரது உறவினர்கள் விரும்பவில்லை என வெளியாகியுள்ள தகவலை அவர் மறுத்துள்ளார்.
"டிலான் பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து தாஜூடீனின் உறவினர்கள் சடலத்தை தோண்டி எடுக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார் எனினும் நாம் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை, நாம் நாட்டின் நீதிக்கு கட்டுப்பட வேண்டும் , நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ் பணிய வேண்டும், எமது மத த்தின் படி குற்றவாளிகளுக்கு கடவுள் மூலம் தண்டனை கிடைக்கும். சம்பவம் நடந்திருப்பது எனது மகனுக்கு, நாளை யாருக்கும் இதுபோல் நடக்கக் கூடாது" என்றுள்ளா.
மேலும் சம்பவம் இடம்பெற்ற போது மஹிந்த ராஜபக்ஷவே ஆட்சியில் இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர் அன்று விசாரணை செய்யாமல் தற்போது ஆட்சிக்கு வந்தால் விசாரிக்கப்போவதாக தெரிவிக்கின்றமை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
" எனது அக்காவின் மகனான தாஜூடீன் என்மீது நிறைய அன்பு வைத்திருந்தார். அவர் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். சட்டவிரோத காரியங்களுக்கு துணைபோக மாட்டார். அவர் இறந்து பலவருடங்களுக்கு பின்னர் எனக்கும் , எனது மனைவிக்கும் மகனொருவன் பிறந்தான் , அவனுக்கு நாம் வைத்த பெயர் 'தாஜூடீன்' " என்றார்.