1,841 Views
நம்மை முதலீடாகவைத்து கோடிகளில் புரள்கிறது பேஸ்புக்.
இந்நிலையில் புதிய மைல்கல்லொன்றை பேஸ்புக் எட்டியுள்ளது.
ஆம், ஒரே நாளில் 1 பில்லியன் பேர் பேஸ்புக் பாவித்தனர் என்பதே அம்மைல்கல்லென பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இம் மைல்கல்லை தொட்ட தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது உலகின் சனத்தொகையில் 7 இல் ஒருவர் பேஸ்புக்கை உபயோகித்துள்ளதாக ஷக்கர்பேர்க் தெரிவிக்கின்றார்.
இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர் , பேஸ்புக்கில் அங்கம் வகிப்போருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
1.49 பில்லியன் பேர் பேஸ்புக்கை மாதாந்தம் உபயோகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.