அட்டகத்தியின் பின் ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி,
கெத்ரின் நடித்து வெளியான திரைப்படம், 'மெட்ராஸ்'. பலராலும் பாராட்டப் படுகின்ற மெட்ராஸ் திரைப்படம், சூப்பர் ஹிட் என பேசப்படுகிறது. பருத்திவீரனுக்குப் பிறகு, கார்த்தியின் ஒரு திரைப்படம் அதிக பாராட்டு பெறுகிறது என்றால், அது 'மெட்ராஸ்' தான்.
இந்த மெட்ராஸ் திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ரஞ்சித்தைப் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர்த் தளத்தில் பதிவேற்றிய ரஞ்சித் 'கலக்கிட்ட எப்படி கண்ணா இப்படி ஷீட் பண்ண? சூப்பர் கண்ணா' என ரஜினி பாராட்டியதாக தெரிவித்துள்ளார் ரஞ்சித்.
சூப்பர் ஸ்டாரின் பாராட்டானது வளர்ந்து வரும் இயக்குனரான ரஞ்சித்துக்கு ஒரு பெரிய ஊக்குவிப்பாக அமைந்திருக்கும். மேலும் பல பிரபலங்கள் இந்த படத்தைப் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது கார்த்திக்கும் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மெட்ராஸ் நாயகி Catherine Tresaவின் கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்கள்.
Catherine Tresa