றகர் வீரர் மொஹமட் தாஜூடினின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
தாஜூடினின் மரணம் தொடர்பில் முக்கிய மரண விசாரணையினை மேற்கொண்ட, தற்போதைய நீதிமன்ற வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன், அந்த விசாரணையை மேற்கொண்ட மேலும் இரண்டு மேலதிக நீதிமன்ற வைத்திய அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கொழும்பு நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிசிற்கு இந்த விடயத்தை கடிதம் மூலம் நேற்று தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக, தாஜூடினின் மரணம் தொடர்பில் மேற்கொண்ட மரண விசாரணையில் உண்மை தன்மை இருக்காது என்றும் அந்த கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.