Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
மனித இனத்தினையொத்த புதிய உயிரினம்: உலகினை வியப்பில் ஆழ்த்தியது!

New human species - மனித இனத்தினையொத்த புதிய உயிரினம்: உலகினை வியப்பில் ஆழ்த்தியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,680 Views
இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்படாத மனிதனை ஒத்த உயிரினமொன்றின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

'ஹோமோ நலெடி' என அவ்வினம் பெயரிடப்பட்டுள்ளது. மனித இனமும் அங்கமாகவுள்ள 'ஹோமோ' என்ற உயிரினப் பிரிவில் இவ்வினமும் சேர்க்கப்பட்டுள்ளது.

'ஹோமோ நலெடி'

குறித்த உயிரினமானது சுமார் 1.5 அடி உயரமும் 45 கிலோ நிறையும் கொண்டதாக இருந்திருக்கக்கூடுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித மண்டையோட்டினை ஒத்த மண்டையோட்டினை இவ்வுயிரினம் கொண்டிருந்ததாகவும், ஆண்கள் , பெண்களை விட உயரமானவர்களாக இருந்திருப்பர் எனவும் , அவர்களின் மூளையானது தோடம்பழத்தின் அளவினை ஒத்ததாக இருந்தக்கூடுமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவற்றின் தோற்றம் மனிதர் - மற்றும் வாலில்லாக் குரங்கின் கலப்பினைப் போல இருந்திருக்க க் கூடுமெனவும் , எமது மூதாதையர் என அறியப்பட்ட 'ஹோமோ - ஜீனஸ்' பிரிவினரையொத்தவர்களின் பற்களையொத்த பற்களைக் கொண்டிருந்திருக்கக் கூடுமெனவும் தெரிவிக்கின்றனர்.

எனினும் தோள்பட்டையானது வாலில்லாக் குரங்கினையொத்ததென தெரிவிக்கப்படுகின்றது. அவற்றின் பாத ங்களானது நவீன மனிதனுடன் வேறுபடுத்திபார்க்கமுடியாத தாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றின் கால்கள் நீண்டவையாக இருந்திருக்கக்கூடுமெனவும் , அவை நீண்ட தூர பயணத்துக்கு ஏதுவாக அமைந்திருக்குமெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றின் கைகள் மனிதரையொத்த தாக காணப்படுவதாகவும் , அவை உபகரணங்களை உபயோகிக்க க் கூடிய திறனை பெற்றிருந்தமை புலப்படுவதாகவும் , நன்கு வளைந்த விரல்களை அவை கொண்டிந்தமையானது ஏறும் திறனை அவ் உயிரினம் கொண்டிருந்தமை புலப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 
கண்டுபிடிப்பு

இரண்டு வருடங்களுக்கு முன்பாக கிடைத்த தகவலையடுத்து தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரருகில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகள் அங்குள்ள குகையொன்றில் இவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். மிகப் பெரிய குகைத் தொகுதியில் இரு குகையில் இருந்தே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித பரிணாம வளர்ச்சியில் இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எச்சங்களின் சரியான வயது கண்டறியப்படாத போதிலும் சுமார் 20,000 முதல் 2 மில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்டதாக இருக்கக்கூடுமென தெரிவிக்கின்றனர். 



இந்தக் குகையில் புதைக்கப்படுவதற்கான இடமாக இருந்திருக்கக்கூடிய ஆழமான நிலவறை ஒன்றில் இருந்து பதினைந்து உடற்பாக எலும்புகளின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 15 உடற்பாகங்கள் தவிர, மேலும் 1,550 படிம உறுப்புகளும் இந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளது.  சிதைவுகள் சிறந்த நிலையில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



எனினும் இவ்விடம் தொடர்பான வெவ்வேறு விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றது.

இந்த பகுதியில் மேலும் ஆயிரக்கணக்கில் இந்த இனத்தின் படிமங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது என ஆராய்ச்சியாளர்களின் தலைவர்  தெரிவித்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top