4,828 Views
வஸீம் தாஜுடீனின் மரணம் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போதே குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளனர்.
முதல் மரண பரிசோதனையின் பின்னரே உடல் கூறுகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது தொடர்பிலான பதிவுகள் எதுவும் இருக்கவில்லையெனவும் தெரியவருகின்றது
தாஜூடீன் உடலின் முதல் பரிசோதனையை நட த்திய மருத்துவர் குழாம் , உடல் பாகங்களை குளிர்விப்பானில் பதப்படுத்தி வைக்கும்படியும் , அதன் அவதானிப்புக் குறிப்புகளையும் பத்திரமாக வைக்கும்படி முன்னாள் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமகோரனுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும் , அவை தொடர்பான எவ்வித தகவலும் இல்லையென கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்துள்ளார். மேலும் உடல் பாகங்கள் எக்ஸ்ரே அறிக்கைகளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமோ அல்லது சம்பந்தமான அதிகாரிகளிடமோ ஒப்படைக்கப்படவில்லை என அஜித் தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போயுள்ள உடல் பாகங்கள் மற்றும் எக்ஸ்ரே அறிக்கை கிடைத்ததன் பின்னரே இறுதி மரண பரிசோதனையை நட த்த முடியுமென தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.