கோடம்பாக்கத்தைப் பொறுத்தவரைக்கும், நாளாந்தம் புதுப் புது செய்திகள் யாரோ ஒரு பிரபலத்தைப் பற்றி வெளிவந்து பேசப்படும் விடயமாக மாறி விடுவதும், அதனை நமது இணைய விரும்பிகள் தமது சமூக வலைத்தளங்களில் கிலாகிப்பதும் வழமையான நிகழ்வுகளாக மாறிவிட்டன.
இந்நிலையில், நீண்ட நாட்களாக நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கி வரும் படத்தின் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், இப்பொழுது தலைப்பு இரசிகர்களினால் உறுதி செய்யப்படுள்ளது. இது பலரிடமும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
இப்பொழுது, சில மணித்துளிகளுக்கு முன்னால், அஜித்குமாரின் நடிப்பில் உருவாகும் தல 56 என இதுவரைக்கும் செல்லமாக அழைக்கப்பட்ட திரைப்படத்துக்கு, வரம் என பெயரிடப்பட்டுள்ளதாக ஒரு கதை கசிய ஆரம்பித்தது. பலரும் எப்படியாவது தலயின் புதிய திரைப்பட தலைப்பு அறிவிப்பு எப்போது வருமென காத்துக் கிடந்த நிலையில், வரம் என இந்தச் செய்தி இப்பொழுது இணையத்தில் காட்டுத் தீயாகியுள்ளது.
இந்த விசயமும் தலைப்பும் இப்படி இருக்கையில், இன்னொரு பக்கத்திலிருந்து படத் தலைப்பு வரம் அல்ல, ஆரவாரமென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இரசிகர்கள் குழப்பமடைய ஆரம்பித்துள்ளனர்.
பலரும் பல கதைகளை அள்ளி வீச ஆரம்பித்துள்ள நிலையில், இன்னும் அஜித் சம்மந்தப்பட்ட படக்குழுவினர் வாய் திறக்கவில்லை. எனவே, உத்தியோகபூர்வமாக படக்குழு படத்தலைப்பை அறிவிக்கும் வரை, வரமா? ஆரவாரமா என்பது தெரியாமல், காத்திருக்க வேண்டிய கட்டாயம் நமக்காகி விட்டது.
-கோடம்பாக்கக் குருவி-