தல யின் வேதாளத்திலும் ஸ்ருதி ஹாசனுக்கு பாட்டு.
பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் தல அஜித்தின் வேதாளம் தயாராகி வருகிறது , இதில் வக்கீலாக ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றார்.
‘வேதாளம்’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அனிருத் இசையில் ஸ்ருதி ஒரு பாடலை பாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளதாகவும்,ஸ்ருதிஹாசன் மட்டுமே தனியாக இந்த பாடலை பாடியுள்ளார் என்றும் உள்ளக செய்திகள் வெளியாகியுள்ளன.
தல கார் ஓட்டுனராகவும்,இன்னுமொரு பாத்திரத்தில் தாதா வாகவும் கலக்க காத்திருக்குறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டை அனிருத் பிறந்தநாளான அக்டோபர் 16-ந் தேதி வெளியிடவுள்ளனர்.
இசையமைப்பாளரும் ஸ்ருதியும் நல்ல நண்பர்கள், அனிருத்தின் இசையமைப்பின் அறிமுக படமான 3 இலிருந்தே அப்பப்போ ஒவ்வொரு பாடல்களாவது பாடியுள்ளமை தெரிந்ததே.
அதைத் தொடர்ந்து, தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற அக்டோபர் 1-ந் தேதி பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சுமிமேனன், அஸ்வின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. வரும் தீபாவளி எல்லோருக்கும் தல தீபாவளி தான்.
-ரிஷிவ்-