457 Views
இப்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் ஒரு சிறுமி மலாலா யூசுப்சாய்.
இவர் 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 17வயதான சிறுமி. இது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் இவருக்கான வாழ்த்துக்கள் சமூக வலைதளங்களில் குவிந்து கொண்டிருக்கின்றன.
எல்லா துறையிலும் உள்ள பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை பகிந்துகொள்கின்றனர்.
இப்படி இருக்க பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்னானி மலாலாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறி அனைவரின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். எப்படி என்றுதானே கேட்கின்றிர்கள் இதோ அவர் தனது ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்து
“மசாலா மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பற்றிய நல்ல செய்தியை கேட்டேன். என் யங்கிஸ்தான் படத்தில் வரும் உரை அவரை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று பாக்னானி ட்விட்டரில் தெரிவித்தார்”
மலாலாவை மசாலா என்று ட்வீட் செய்த பாக்னானியை மக்கள் கிண்டலடிக்க ஆரம்பித்தனர் பிறகு அவர் அந்த மசாலா ட்வீட்டை அழித்துவிட்டு. சாரி மலாலா டைப் செய்யும்போது தவறாகிவிட்டது என்று பாக்னானி மறுபடியும் ட்வீட் செய்திருக்கின்றார்.
அது டைப் செய்யும்போது ஏற்பட்ட தவறு. ஆனால் அதனால் நீங்கள் அனைவரும் சந்தோஷமாக சிரித்தீர்கள் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பாக்னானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர்தான் இப்படி என்றால்……………….
மலாலாவுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மாடல் நவோமி காம்பெல் அவரின் பெயரை மலேரியா என்று தவறாக குறிப்பிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதிக்கான விருது பெற்ற மலாலாவுக்கு அமைதி இல்லை