12,404 Views
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மாவை இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மறுத்துள்ளார்.
தங்களின் காதலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த அவர்கள் அண்மையில் தான் அதை வெளிப்படையாக தெரிவித்தனர்.
அனுஷ்காவும், கோஹ்லியும் அவர்களின் காதலை ரகசியமாக வைத்திருந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் காதலிக்கத் தொடங்கியதுமே அந்த விஷயம் பொலிவுட் முழுவதும் பரவிவிட்டது.
பின்னர் ஊடகங்களுக்கும் அந்த செய்தி கசிந்துவிட்டது. அனுஷ்காவுக்கு இந்த ஆண்டே கோஹ்லியை திருமணம் செய்ய ஆசை. ஆனால் கோஹ்லியோ திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். நான் முதலில் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.