2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டது.
இவ் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நியமைச்சர் தெரிவிக்கின்றார்தன் ஓர் அங்கமே 11 அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பு என அவர் தெரிவிக்கின்றார். மேலும் வீடமைப்பு , சுகாதார துறை , போக்குவரத்து உள்ளிட்ட கீழ்க்கட்டுமாண வசதிகளின் மேம்படுத்தல் என பல்வேறு அம்சங்களை மேற்படி வரவு செலவுத்திட்டம் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான மொத்த வருமானம் 2047 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவாக 2787 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி துண்டு விழும் தொகையாக 740 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறு முதலீட்டு நிறுவனங்களை தரப்படுத்துவதற்காக தரநிர்ணய சபை ஒன்று உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இதன்படி அனைத்து சிறு முதலீட்டு நிறுவனங்களும், உத்தேச தரநிர்ணய சபையில் வருடாந்த கட்டணம் செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவான கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற கீரி சம்பா 50 ரூபாவாகவும், சம்பா 41 ரூபாவாகவும், நாடு 38 ரூபாவாகவும் கிலோ ஒன்றுக்கான உத்தரவாத விலை அறிவிக்கப்படும்.
தேசிய பால்மா உற்பத்திக்கு 400 கிராமிற்கு 35 ரூபா என்ற நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது.
இதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் 400 கிராமின் விலை 325ல் இருந்து, 290 ரூபாவாக குறைவடையுள்ளது.
தேயிலை ஏற்றுமதியின் போது சிலோன் ரீ என்ற வர்த்தக குறி பயன்படுத்தப்பட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தேயிலை, தெங்கு மற்றும் றப்பர் ஆராச்சி நிலையங்களை அபிவிருத்த செய்வதற்கான நிதி ஒதுக்கங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த காலங்களில் பாக்கு உற்பத்தி கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.
அதனை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், மீன்பிடித்துறை சார்ந்தவர்களுக்கு 1 மில்லியன் ரூபாய் காப்புறுதி வழங்கப்படும் என்றும் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார இலக்காக கிராமிய அபிவிருத்தி காணப்படும்.
கிராமிய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா 1500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படும்.
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்று உருவாக்கப்படும்.
காட்டு யானைகள் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குள் பிரவேசிப்பதால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தணித்து சூழல்பாதுகாப்பிற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக 4 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்படும்.
சிலாபம், மிரிஸ்ஸ, கல்முனை, காரைநகர் மற்றும் பூர்னவெல்ல துறைமுக அபிவிருத்திகளக்காக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
ரின்மீனுக்காக 125 ரூபா சலுகை விலை அமுலாக்கப்படுவதுடன், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக லக்சத்தொசவுக்கு 300 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படும்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறுவடைகளை களஞ்சியப்படுத்துவதற்காக மன்னாரிலும், ரத்தினபுரியிலும் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்துவதற்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
புதிய 50 தங்க இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண சந்தை விரிவாக்கலுக்காக 2 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளன.
இலங்கைக்கு சொந்தமான பாரிய அளவான நிதி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அவற்றை உள்நாட்டுக்கு கொண்டு வந்து அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்.
இதேவேளை, பெருந்தோட்டங்களில் 10 வருடங்களுக்கு மேல் குடியிருந்தவர்களுக்கு, அவர்களின் வீடுகள் சொந்தமாக்கப்படும் என்றும் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு காணிகளை குத்தகைக்குவிடுவதற்கான வரி நீக்கப்படவுள்ளது.
சூரிய ஒளி சக்தி பயன்பாடு ஊக்குவிக்கப்படும்.
குடிசைகளில் வாழ்கின்றவர்களுக்காக ஒருலட்சம் வீட்டுத் திட்டமுமும், நடுத்தர வருமானம் பெரும் குடும்பங்களுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீட்டுத்திட்டமும், சிரேஷ்ட்ட பொது சேவை அதிகாரிகளுக்காக 5 ஆயிரம் வீட்டுத்திட்டமும் அமுலாக்கப்படும்.
காணிகள் தொடர்பில் இலத்திரனியல் தகவல்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
2016 ஜுன் மாதம் நிறைவடையும் போது, 10 பில்லியனாக வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல் இயங்கும் வகையில், இறக்குமதி ஏற்றுமதி வங்கி தொழிற்படவுள்ளதுடன், அதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
திருகோணமலை மற்றும் ஹாம்பாந்தொட்டை துறைமுகங்கள் கப்பல் திருத்தல் மற்றும் கப்பல்களுக்கு எண்ணெய் மற்றும் தண்ணீர் வழங்கும் நோக்கில் பயன்படுத்தப்படவுள்ளன.
தேசிய இலத்திரனியல் அடையாளப்படுத்தல்கள் அடுத்த வருடம் முதல் நாடு முழுவதும் அமுலாக்கப்படும்.
வெளிநாட்டு நாணய வர்த்தகம் குறித்த புதிய சட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளன.
இதற்கிடையில், கட்டுமானத்துறையில், சுமார் 7 ஆயிரத்து 500 இளைஞர்களுக்கான தொழிற்சார் பயிற்சிகளுக்காக 500 மில்லியன் ஒதுக்கப்படும்.
கட்டுமான பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும்.
வெளிநாட்டு கட்டுமானப் தொழிற்துறையினர் உள்நாட்டு கட்டுமான துறையினருடன் இணைந்து பணியாற்ற முடியும்.
வீதி விபத்துக்களின் போது 10 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்படும். இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது
அரசாங்க ஊழியர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் வாகன இறக்குமதி சலுகை நீக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் சுகாதார வசதிகளுக்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
பாடசாலை ஆசிரியர்களுக்கான தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படும்.
பாடசாலை ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியளிப்புகள் வழங்கப்படும் என்பதோடு, குறிப்பாக விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களுக்காக விசேட பயிற்சிகள் வழங்கப்படும்.
தனியார் துறையினருக்கான குறைந்த பட்சம் வேதன அதிகரிப்பான 2500 ரூபாய், இந்த வருடம் 1500; ரூபாவும், அடுத்த வருடம் 1000 ரூபாவுமாக இரண்டு கட்டங்களாக வழங்கப்படவுள்ளது.
தனியார்துறை பணியாளர்களுக்கான ஐந்து வேலைநாட்கள் அடங்கிய வாரம், கட்டாயமாக கண்காணிக்கப்படும்.
அதேவேளை, கல்வித்துறைக்காக 90 ஆயிரம் மில்லியன் ஓதுக்கப்படவுள்ளது.
பாடசாலைகளில் சேர்கின்ற மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 250 ரூபா உடனான வங்கிக் கணக்கு தொடக்கப்பட வேண்டும்.
பலமான நிதி நிறுவகத்தை ஏற்படுத்துவதற்காக, பல வங்கிகள் ஒன்றிணைக்கப்படவுள்ளன.
பல்கலைக்கழக மாணவர்கள் மடிகணினிகளை கொள்வனவு செய்வதற்காக வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் என்பதோடு, இதற்காக 300 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளன. அனைத்துப் பல்லைக்கழகங்களிலும் இலவச 'வைபை' சேவை வழங்கப்படும்.
அனைத்து மாணவர்களும் கல்விப் பொதுத் தராத உயர்தரத்தை நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது, சாதாரணதர பரீட்சையின் பின்னர் தொழிற்சார் கற்கையை கற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
வகுப்பொன்றுக்கான மாணவர்களின் எண்ணிக்கை 35க்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகளுக்குமான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாசிகசாலை வசதிகளை வழங்குவதற்கான 15 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தோட்டப் பாடசலைகளின் அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
புத்தகங்கள், சஞ்சிகைகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி ரத்து செய்யப்படவுள்ளது.
காவற்துறை நிலையங்கள் 428ல் இருந்து 600ஆக அதிகரிக்கப்படவுள்ளன.
இதற்கிடையில், யாழ்ப்பாணம், குருனாகலை மற்றும் அனுராதபுர வைத்தியசாலையில் அபிவிருத்தி செயயப்படவுள்ளதுடன், 2000 மில்லியன் ரூபாய் செலவில் மின்னேரியாவில் சிறுநீரக தொகுதிக்கான விசேட வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.
நல்லூர், கண்டி மற்றும் மாத்தளையில் புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
திகன, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளன.
மத்தளை விமான நிலையில் சரக்குபரிமாற்ற விமான நிலையமாக மாற்றப்படவுள்ளது.
2016ம் ஆண்டாகும் போது இலங்கையின் மொத்த துறைமுகங்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கப்படும்.
2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின்படி, சமயல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.
இதன்படி சமயல் எரிவாயுவின் விலை 150 ரூபாவால் குறைக்கப்படும்.
உருளைக்கிழக்கு கிலோ ஒன்றின் விலை 75 – 85 ரூபாவாகும், பெரிய வெங்காயத்தின் விலை 85 – 95 ரூபாகவும் குறைக்கப்படும்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற 400 கிராம் பால்மாவின் விலை 295 ரூபாவாக காணப்படும்.
குழந்தைகளுக்காக ஒரு கிலோ பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்.
ரின்மீனின் விலை 125 ரூபாவாக காணப்படும்.
நெத்தலி கிலோ ஒன்றுக்கான அதியுச்ச விலை 410 ரூபாகவும், பருப்பு கிலோ ஒன்றுக்கான அதியுச்ச விலை 169 ரூபாவாகவும், கருவாடு கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச விலை ஆயிரத்து100 ரூபாவாகவும், கடலை கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச விலை 169 ரூபாவகவும் காணப்படும்.
அதேநேரம் மண்ணெண்ணை லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.