சீனாவின் Huawei , China Unicom ஆகிய நிறுவனங்கள் இணைந்து, பெய்ஜிங் அருகே உள்ள ஹெபெய் மாகாணத்தின் சியோங்அன் பகுதியில், உலகின் முதலாவது 10G Cloud Broadband சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இது 50G PON (Passive Optical Network) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால், இதன் மூலம் 9,834 Mbps வேகத்தில் தரவுகளை Download செய்யவும், 1,008 Mbps வேகத்தில் Upload செய்யவும் முடிகிறது.
இதன் மூலம் 90GB அளவுள்ள கோப்புகளை (Files) சில விநாடிகளில் தரவிறக்க (Download) முடிகிறது.
இது வழக்கமான Broadband ஐ விட 10 மடங்கு வேகமுள்ளதுடன், Latencys மிகக் குறைவாக உள்ளது. இதன் மூலம் 8K Videos, மேம்பட்ட Cloud Computing, VR மற்றும் AR அனுபவங்களைத் துல்லியமாக அனுபவிக்க முடியும்.
சீனா இதுவரை 4.25 மில்லியன் 5g Base Stationகளை நிறுவியுள்ளதோடு, Chang Guang Satellite Technology நிறுவனம் 100 Gbps வேகத்தில் செயற்கைக்கோள் லேசர் தகவல்தொடர்பு சேவையில் சாதனை படைத்துள்ளது.
இது Starlink வேகத்தை விட 10 மடங்கு அதிகமாகும். இது Digital உலகில் சீனாவின் அதிவேக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய அடையாளமாகும்.