தமிழ் சினிமாவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் Re - Release செய்யும் கலாசாரம் தற்போதைய தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அவ்வாறு வெளியாகும் திரைப்படங்களை தற்போதைய இரசிகர்களும் கொண்டாடி வருவதால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களை Re - Release செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில், இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முரளி மற்றும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் தற்போதும் இரசிகர்களால் இரசிக்கப்பட்டு வருவதால், இத் திரைப்படம் நிச்சயமாக திரையரங்குகளில் மீண்டும் மிகப் பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படத்தை மெருகேற்றி எதிர்வரும் மே மாதம் Re - Release செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த நாட்களில் Re - Release செய்யப்படும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படத்தையும் இரசிகர்கள் கொண்டாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.