தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர் அஸ்வத் மாரிமுத்து.
இவர் இயக்குநர் மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.
2020 ஆம் ஆண்டு வெளிவந்த “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக அறிமுகமாகியிருந்தார்.
" ஓ மை கடவுளே ” திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “ Dragon” திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இத்திரைப்படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வெற்றி பெற்று, வசூல் சாதனையும் படைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 'எஸ்.டி.ஆர் 51' திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'God of Love ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகி கதைச் சொல்லியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், இந்தத் தகவல் இன்னும் உறுதியாகவில்லை.
ஆகவே, கமல்ஹாசனுடனான கூட்டணியை அஸ்வத் மாரிமுத்து அமைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.