பொலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர்கான்.
ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ' சித்தாரே ஜமீன் பர் ' திரைப்படத்தில் நடித்து வரும் இவர், 'லாகூர் 1947' என்ற திரைப்படத்தைத் தயாரித்தும் வருகிறார்.
இதற்கிடையில், அமீர்கான் கனவுத் திரைப்படமான ‘மஹாபாரதம்’ திரைப்படத்தை எடுக்கவுள்ளார்.
தற்போது இதன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. பல பாகங்களாக உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாகத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் அர்ஜுனன் கதாபாத்திரத்தில் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அமீர்கான் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அட்லீயின் திரைப்படத்திற்காக மும்பை சென்றுள்ள அல்லு அர்ஜுன், அமீர் கானை சந்தித்து இத்திரைப்படம் குறித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
விரைவில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.