பிரபல சிங்களத் திரைப்பட நடிகை மாலினி பொன்சேகா இன்று சனிக்கிழமை (24) காலமானார்.
உடல்நலக் குறைபாடு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 78ஆவது வயதில் உயிரிழந்தார்.
'இலங்கை சினிமாவின் ராணி' என்று இலங்கைத் திரையுலகில் அழைக்கப்பட்டவர். கடந்த 70 ஆண்டுகள் இலங்கையின் கலை வளர்ச்சியில் அசைக்க முடியாத, மறக்க முடியாத, மிகச் செல்வாக்குமிக்கவராகக் காணப்பட்டவர் மாலினி பொன்சேகா.
நடிகையாக மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசியலிலும் அறியப்படவர்.
150ற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள மாலினி பொன்சேகா, இலங்கை- இந்திய கூட்டுத்தயாரிப்பில் உருவான "பைலட் பிரேம்நாத்" எனும் திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.