இந்த ஆண்டு இந்தியாவின் குடியரசு தினத்தன்று மத்திய அரசினால் மொத்தம் ஏழு பத்மவிபூஷன் விருதுகளும், 19 பத்மபூஷன் விருதுகளும், 113 பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
முதற்கட்டத்தில் நடிகர் அஜித்குமார், நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 28ஆம் திகதியன்று ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மொத்தமாக 71 பேருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று மாலை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் எஞ்சியிருந்த 68பேருக்கு இரண்டாம் கட்டமாக விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளைச் செய்த புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார். அந்தவகையில் இந்த நிகழ்வில் நடிகை ஷோபனாவிற்கும் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அதேபோன்று பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கும் பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.