"பாணா காத்தாடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி.
பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி இரசிகர்களைக் கொண்டவர் நடிகர் அதர்வா.
தற்பொழுது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் 'DNA' என்ற திரைப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். திரைப்படத்தின் Teaser கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெளியாகியிருந்தது.
இந்நிலையில், 'DNA' திரைப்படம் வெளியாகும் திகதியை போஸ்டர் வெளியிட்டு திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தத் திரைப்படம் இம்மாதம் 20ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.