அசுரன், விடுதலை 2, வாத்தி போன்ற திரைப்படங்களில் நடிகராகவும், தனுஷிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றிவர் கென் கருணாஸ். தற்போது யூத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதுடன் இதில் அனிஷ்மா அனில்குமார், சூரஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, பிரியன்ஷி யாதவ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை, கல்லூரியின்போது ஏற்படும் காதல், நட்பு போன்றவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில் மார்ச் 19ஆம் திகதி வெளியான இத்திரைப்படம் தற்போதுவரை இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.