தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம் 'பிச்சைக்காரன்'.
இயக்குநர் சசி இயக்கிய இத் திரைப்படம் இரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.
இந்த நிலையில் இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார். இருவரும் இணைந்துள்ள இத் திரைப்படத்திற்கு 'நூறு சாமி' என தலைப்பிடப்பட்டுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
இத் திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில்
இத் திரைப்படத்தின் 1st Look Poster இந்த மாதம் 16ஆம் திகதி வெளியாகவுள்ளது.