இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'அர்ஜூனன் பேர் பத்து'.
இத் திரைப்படத்தில் யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட் மற்றும் லெனின் பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத் திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘அர்ஜூனன் பேர் பத்து’ திரைப்படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். டீசரின் படி ஒரே வண்டியை பலரிடம் ஏமாற்றி விற்ற நபர் பற்றிய இன்வெஸ்டிகேஷன் கதையம்சத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது.
இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.