அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராகத் திகழ்ந்தவர்.
இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள், 35 அரைசதங்களுடன் 7195 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும், 3ஆவது வீரராக நீண்டகாலமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்த முக்கிய வீரர்.
கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில், 2023ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடினார். இந்நிலையில் இன்று தனது ஓய்வு முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.