2010ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இறுதியாக இவர் நடித்த டி.என்.ஏ திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பராசக்தி, இதயம் முரளி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதர்வா நடித்து முடித்துள்ள தணல் திரைப்படத்தின் TRAILER வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி
நடித்துள்ளார்.
இவர் பிரம்மன், மாயவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இத்திரைப்படத்தை அன்னை பிலிம் ப்ரொடக்ஷன் தயாரிக்கின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் சில காரணங்களால் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது செப்டம்பர் மாதம் 12ம் திகதி திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.