தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின்.
'நட்புனா என்ன தெரியுமா' திரைப்படத்தில் கதாநாயகனாக சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த நிலையில் இவர் நடித்த Lift மற்றும் டாடா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கவின்,தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் 'HI' என்ற திரைப்படத்தில் கவின் நடித்து வருகிறார். இத் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுவது போன்ற கதைக்களத்தில் இத் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இத் திரைப்படத்தின் போஸ்டரை திரைப்படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.