தமிழ் சினிமாவில் ரஜினி-கமலுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய்- அஜீத்துக்குத்தான் தற்போது ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
அவர்களில் விஜய் அடிக்கடி ரசிகர்களை சந்திப்பதும் . நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தனது மன்றங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருக்கிறார்.என்பது குறிப்பிட தக்கது. இது இவ்வாறு இருக்க.
தீபாவளி அன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கத்தி' திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முதல் நாளில் ரூ.23 கோடி வசூல் செய்திருக்கிறது.

கத்தி படத்துக்கும் தமிழகமெங்கிலும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து வரும் விஜய் ரசிகர்கள்இ இதுவரை தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்இ கட்அவுட் என்று வைத்து வந்தவர்கள்இ இப்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் விஜய்க்கு மெழுகால் ஆன சிலை வைத்து பரபரப்பு கூட்டியுள்ளனர். இந்த சிலையின் மதிப்பு ரூ.1.5 லட்சமாம்.

அந்த சிலை நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.அப்போது அந்த சிலையை நிறுவிய பேஸ்புக் விஜய் பேன்ஸ் கிளப் ரசிகர்கள் அந்த சிலையுடன் நின்று வணங்குவது போலவும்இ முத்தம் கொடுப்பது போலவும் விதவிதமான போட்டோக்களை எடுத்துக்கொண்டதோடுஇ அந்த போட்டோக்களை இணையதளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர். இந்த சேதியறிந்து ஏராளமான ரசிகர்கள் அந்த தியேட்டருக்கு வந்து விஜய்யின் சிலையை பார்த்த வண்ணம் உள்ளனர்.

இச்சிலையை ஃபேஸ்புக்கில் இயங்கி வரும் 'Facebook Vijay Fans Club - FVFC என்ற பக்கத்தினர் நிறுவி இருக்கிறார்கள். இந்தச் சிலை 'தலைவா' படத்தில் வரும் விஜய் போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது
ஆக தமிழ் சினிமாவில் உயிரோடு இருக்கும் ஹீரோக்களில் சிலை வைக்கப்பட்ட முதல் நடிகராகியிருக்கிறார் விஜய்.