காலத்துக்கு காலம் மாறி வரும் ட்ரெண்டின் அடிப்படையில் இன்றைய இளசுகள் மட்டுமல்ல அனைவரும் மாற முயற்சிப்பதுண்டு. அந்த வகையில் இப்போது அனைவராலும் விரும்பப்படும் ஒரு விடயம் தான் இந்த selfie. ஒரு நண்பரை சந்தித்தால் போதும் உடனே selfie எடுத்து பேஸ்புக்கில் போட்டுவிடுவதுண்டு. நம்மில் எத்தைனையோ பேர் இப்படி இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.
இது இப்படியிருக்க ரஷ்யாவில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டில் இனி selfie எடுப்பதற்கு தடை என்பதே ரஷ்ய அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டம். குழுவாக selfie எடுப்பதற்கு முகங்களை கெமரா கண்களுக்கு கொண்டுவருவதற்க்காக தங்கள் தலைகளை ஒட்டும்போது, பேன் பரவுகின்றமையே இப்படியொரு சட்டம் கொண்டு வர காரணம் என கூறப்படுகிறது. இது மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் ஒரு விடயமாக அமைகிறதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.
பாவம் ரஷ்யர்கள் இனி Selfie எடுக்கும் சந்தோஷமும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இதனால் பேஸ்புக் பாவனையாளர்களுக்கும் நன்மையுண்டு. பேஸ்புக்கை திறந்தவுடன் சில படங்களைப் பார்த்து நாம் பயப்படுவதை போன்று இனி ரஷ்யவிலுள்ள பேஸ்புக் பாவனையாளர்கள்; பயப்பட தேவையில்லை.
எனவே ரஷ்யாவில் Selfieபுள்ள பாடல் பாட முடியாது போல..
தகவல் தொகுப்பு
ர. பிரவீனா