Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையில் 08 உடன்படிக்கைகள் கைச்சாத்து

MOU between SL and Pak - இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையில் 08 உடன்படிக்கைகள் கைச்சாத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,115 Views

இலங்கை மற்றும் பாக்கிஸ்தானுக்குமிடையே இருதரப்பு உறவுகளை மேலும் உறுதிசெய்துகொள்ளும் முகமாக இரு 
நாடுகளுக்குமிடையே 08 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. 




இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்
,ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்குமிடையே விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பு தொடர்பான
புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கும்
பாக்கிஸ்தான் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.

இரு நாடுகளுக்குமிடையில் தொழில்நுட்பத்தை பரிமாற்றுதல் மற்றும் பரப்புதல்,  ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும்
அபிவிருத்தி, விஞ்ஞான ரீதியானதும் தொழில்நுட்ப ரீதியானதுமான தகவல்கள் மற்றும் அறிவினை
பரிமாற்றுவதன் ஊடாக உயிரியல் தொழில்நுட்பம் , நனோ தொழில்நுட்பம்,  உணவு தொழில்நுட்பம் மற்றும் ஏனைய
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு துறைகள் தொடர்பாக ஊக்குவிப்பதற்கும் இரண்டு நாடுகளுக்குமிடையே
ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் பாக்கிஸ்தான் விஞ்ஞான மன்றத்திற்கும் இடையிலான விஞ்ஞான
மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வூ ஒப்பந்தம் இங்கு கைச்சாத்திடப்பட்டது.

பாக்கிஸ்தான் வியாபார அபிவிருத்தி அதிகார சபைக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்குமிடையிலான
புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்பட்டதுடன்,  இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையே தகவல் மற்றும் நிபுணர்களை
பரிமாற்றம் செய்தல், வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வசதிகளை வழங்குதல், சந்தை ஆராய்ச்சி, இரு
நாடுகளுக்குமிடையே வியாபாரத்தை மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள்
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

இருநாடுகளுக்குமிடையே சுகாதார மற்றும் மருத்துவ துறைகள் தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில்
சுகாதார துறையின் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்பட்டது.

கலாசார துறையின் ஒத்துழைப்பு தொடர்பாகவூம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் கலை, கலாசார மற்றும் பாராம்பரியம்
தொடர்பான துறைகளின் ஒத்துழைப்பின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்தல் மற்றும்
மேம்படுத்துதல் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆராய்ச்சி பயிற்சி நிலையம் மற்றும் பாக்கிஸ்தான் கலை வடிவமைப்பு
நிறுவனம் ஆகியவற்றிற்கிடையிலும் புரிந்துணர்வூ ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top