Obama breaks during gun control - கண் கலங்கிய ஒபாமா: பின்னணி இதுதான் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
4,483 Views
அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பான உரையின்போது, அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அமெரிக்காவில் சமீப காலமாக பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு துப்பாக்கி விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஜனாதிபதி பராக் ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் உரையாற்றுகையில், ''துப்பாக்கி கலாச்சாரத்தை குறைப்பதற்காக அவசரமாக செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு 20 பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைக்கும்போது எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது'' என்று அவர் கூறுகையில் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.
பிறகு கண்களை துடைத்துக்கொண்டு தொடர்ந்த அவர் ''இதற்கு பிறகும் காரணங்களை கூறி சமாளிக்கக்கூடாது. துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் அதிபர்கள் வேண்டுமானால் அரசியல்வாதிகளை கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாது'' என்றார்.