இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் மருமகளொருவர் , மாமியாரை தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவத்தில் புதுத்திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மாமியாரை தாக்கிய சங்கீதா ஜெயின் என்ற அப்பெண் தனது மாமனார் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக முறைப்பாடு செய்துள்ளார்.
சங்கீதா ஜெயின் தங்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை இதனால் தனது மாமனார் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், இதற்கு தனது மாமியார் மற்றும் அனைவரும் உடந்தையாக இருந்ததாகவும் கூறி உள்ளார்.
சி.சி.டிவி கெமரா அவரது அறையை தவிர மற்ற எல்லா அறைகளிலும் மறைத்து வைக்கபட்டு இருந்ததாக கூறி உள்ளார். இது குறித்து முன்பே பொலிஸில் புகார் கூறியதாகவும் ஆனால் அவர்கள் எந்தவித நடவடைக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.