Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
குஷல் ஜனித் பழிவாங்கப்பட்டாரா? : இலங்கை கிரிக்கெட்டை தாக்கியுள்ள ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு (அதிர்ச்சிகர பின்னணி மற்றும் படங்கள்)

Match fixing controversy - குஷல் ஜனித் பழிவாங்கப்பட்டாரா? : இலங்கை கிரிக்கெட்டை தாக்கியுள்ள ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு (அதிர்ச்சிகர பின்னணி மற்றும் படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,855 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் ரங்கன ஹேரத் மற்றும் குஷல் ஜனித் பெரேரா ஆகியோர், போட்டி நிர்ணயகாரர்களால் தொடர்புகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிய வணமுள்ளன.

குஷல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ளமைக்கும் , ஆட்ட நிர்ணயத்துக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என ஆராயும்படி விளையாட்டுத்துறை அமைச்சர் , பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், பயிற்சி நடவடிக்கையொன்றுக்காக , பயிற்சியாளரொருவரால் அழைத்து வரப்பட்ட ஒருவராலேயே போட்டி நிர்ணயம் தொடர்பான யோசனை குஷல் மற்றும் ரங்கணவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ சமரநாயக்க என்ற வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளரே , குறித்த நபரை வீரர்களின் பயிற்சிக்காக அழைத்து வந்துள்ளதாகவும் இணையத்தளங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவரால் பயிற்சிக்கு அழைத்துவரப்பட்ட நபர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த கயான் விஷ்வஜித் என்றழைக்கப்படுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு கிரிக்கெட் கழகத்திலும் அப்பெயரில் வீரரொருவர் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர் பயிற்சிக்கென அழைத்து வரப்பட்டமையானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கயான் விஷ்வஜித் என்ற அவர் நிறுவ ங்களுக்கு நடிகைகள் , மொடல் அழகிகளை விநியோகிப்பதை தொழிலாககொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதி சொகுசு வாகனங்களில் பயணிக்கும் , பணக்காரரை போல நடந்துகொள்ளும் அவர் , இலங்கை அணியின் மேலே குறிப்பிட்ட பயிற்சியாளர் ஊடாக வீரர்கள் பலருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

அவர் தம்மிடம் ஆட்டநிர்ணய யோசனையை முன்வைத்தமை தொடர்பில் குஷல் மற்றும் ரங்கண ஐ.சி.சி மற்றும் இலங்கை கிரிக்கெட்டிடம் தெரிவித்திருந்ததுடன் அவர்கள் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அவரது யோசனையை குஷல் ஜனித் மறுத்துவிட்ட போதிலும் அவர் தொடர்ச்சியாக குஷலின் வீட்டுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குஷல் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளமையாலேயே அவர் குஷலுக்கு தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை வழங்கியுள்ளதகவும் சந்தேகம் வெளியாகியுள்ளது.

 

கயன் விஷ்வஜித் எனப்படும் அவர் , குறித்த பயிற்சியாளர் மற்றும் இலங்கை வீரர்களுடன் எடுத்துக்கொண்ட படங்கள் வருமாறு:






















Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top