இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான ராஜாங்க அமைச்சர் ஹுகோ ஸ்வைர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பங்களிப்புடன், உள்நாட்டு பொறிமுறையை முன்னெடுப்பதற்கான உதவிகளை பிரித்தானியா வழங்கும்.
இதுவரையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் திருப்தியளிக்கின்றன.
எனினும் இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் அதிக அளவில் இருக்கின்றன.
அவற்றில் பெரும்பாலானவற்றை இந்த வருடம் ஜுன் மாதத்துக்குள் நிறைவு செய்யும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.