கண்டி - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் - மே மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதி கிடைத்துள்ளது.
இந்த பணிகள் விரைவில் நிறைவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கண்டி மாவட்டத்தின் அபிவிருத்திக்கான பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்