Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
சிம்பு, அனிருத் மார்ச் மாதம் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு.

#beepSong #simpu #aniruth - சிம்பு, அனிருத் மார்ச் மாதம் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,158 Views
அண்மையில் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைப்பில், நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. பீப் பாடலில் பல ஆபாச வசனங்கள் உள்ளடங்குவதாக தெரிவித்து, பெண்கள் அமைப்புகள் உட்பட பலதரப்பட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன.

இந்த நிலையில் பீப் பாடலுக்கு எதிராக மக்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து கோவை பொலிசார் சிம்பு மற்றும் அனிரூதிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.பெண்களை இழிவுபடுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு  பொலிசாரும் பீப் பாடலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தனர். இது தவிர தமிழ் நாட்டின் பல பொலிஸ் நிலையங்களிலும் பீப் பாடல் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த பாடல் தொடர்பாக சிம்புவும்,அனிரூத்தும் கோவை மற்றும் சென்னை பொலிஸ் நிலையங்களில் முன்னிலையாகுமாறு கூறப்பட்டிருந்தது. அனிரூத் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக வெளிநாடு சென்று நாடு திரும்பினார். பின்னர் கோவை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி 2 பக்க விளக்க கடிதமொன்றை வழங்கியிருந்தார்.

பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச பீப் பாடலை வெளியிட்டதற்காக நடிகர் சிம்புவையும்,இசையமைப்பாளர் அனிரூத்தையும் உடன் கைது செய்யுமாறு உயர் நீதிமன்றத்திற்கு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 12 ம் திகதி இடம்பெற்றது.இதன்போது மனுதாரர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர். அவர்களிடம் நீதியரசரிடம் விளக்கமளித்திருந்தனர்.

பின்னர் இந்த வழக்கு 19 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும் வழக்கினை விசாரித்த நீதியரசர் ராஜ்குமார், நடிகர் சிம்புவையும், இசையமைப்பாளர் அனிரூத்தையும் மார்ச் மாதம் 21 ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top